ஆனி திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம்

ஆனி மாதத்தில் பல்வேறு முக்கிய விசேஷங்கள், விழாக்கள் நடைபெற உள்ளன. ஆனி திருமஞ்சனமும், ஜேஷ்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.

கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். ஆனி மாத பௌர்ணமி நாளில் காரைக்காலில் "மாங்கனித் திருவிழா' நடைபெறும்.


Add new comment

Or log in with...