கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் சம்பியனான சாய்ந்தமருது சஹிரியன் நைட்ஸ் சதுரங்க அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்ப்பாட்டில் திருகோணமலை சுகாதார திணைக்கள பிராந்திய பயிற்சி நிலையத்தில் மாவட்டங்களுக்கிடையிலான மாகாண சதுரங்க போட்டி அண்மையில் நடைபெற்றJ.
இதில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சஹிரியன் நைட்ஸ் சதுரங்க அணியினர் (Zahirian Knights Chess Club)கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அத்துடன் அவ்வணி, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். சபூர்தீன் தெரிவித்தார்.
மாகாண மட்டத்திலான குறித்த சதுரங்க இறுதி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை வீழ்த்திய நிலையில் அம்பாறை மாவட்ட அணியினர் சம்பியனாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சதுரங்கப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஏ.எம்.ஷகீர் அஹமட் (அணி தலைவர்), எஸ்.எல்.எம். சுஹூதான், எப்.எம்.பமிஹாத், எம் எச் எம். நுஸ்ரத், ஐ.கே.எம். ஆக்கில் கான், எம் ஸட் எம். ஷனிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களின் இந்த வெற்றி மூலம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் இவர்கள் பெருமை சேர்ந்துள்ளனர்.
சாய்ந்தமருது விசேட நிருபர்
Add new comment