- வாரத்தில் ஒரு நாள் விடுமுறையாயின் வெள்ளிக்கிழமை வேலை நாளாக கருதப்படும்
அரச ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது தொடர்பான சுற்றுநிருபம் (தரவிறக்கம் செய்க) வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபத்திற்கமைய வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாரத்தின் வேலை நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினம் அல்லது தினங்கள் விடுமுறை தினமாக அமையும் பட்சத்தில், வெள்ளிக்கிழமை வழக்கமான வேலை நாளாக கருதப்படுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமை தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி கடந்த திங்கட்கிழமை (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, தமது வீட்டுத் தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் அரச ஊழியர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு, இவ்வாறு விடுமுறை வழங்க பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்தில் அரச நிறுவனங்களை மூடி ஊழியர்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ஆயினும் நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம், விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இவ்விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை வருமாறு...
Add new comment