2022 பாடசாலை 1ஆம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு (UPDATE)

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (20) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளையதினம் (20) முதலாம் தவணையின் 1ஆம் கட்டத்தை நிறைவு செய்து நாளையதினம் விடுமுறை வழங்கப்படவிருந்த நிலையில், இன்றையதினம் முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கள் (23) முதல் ஜூன் 01 வரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் ஜூன் 06ஆம் திகதி திங்கட்கிழமை, 2022 கல்வியாண்டிற்கான முதலாம் தவணையின் 2ஆம் கட்டத்திற்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினையை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.



 

பாடசாலை 1ஆம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவு 1:48pm

- ஜூன் 06 1ஆம் தவணை 2ஆம் கட்டம்
- O/L பரீட்சைகள் மே 23 ஆரம்பம்
- 517,496 பேர் பரீட்சைக்கு விண்ணப்பம்

பாடசாலைகளின் 1ஆம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளின் 1ஆம் தவணையின் 2ஆம் கட்டம் ஜூன் 06 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2021 க.பொ.த. சாதராண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மே 23, திங்கட்கிழமை ஆரம்பமாகி ஜூன் 01ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், குறித்த பரீட்சைக்கு,

  • பாடசாலை பரீட்சார்த்திகள் - 407,129 பேர்
  • தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 110,367 பேர்

உள்ளிட்ட 517,496 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 542 இணைப்பு நிலையங்களுடன் இணைந்தவாறு, 3,844 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

க.பொ.த. சாதராரண தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் நடாத்துவது நாளை மே 20ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை நாட்கள்/ விடுமுறை - 2021/2022

தமிழ், சிங்கள புதுவருட விடுமுறை
ஏப்ரல் 08, 2022 - ஏப்ரல் 17, 2022

1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஏப்ரல் 18, 2022 - ஏப்ரல் 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022

1ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 08, 2022

2ஆம் தவணை
ஜூலை 18, 2022 - செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022

2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - நவம்பர் 13, 2022

3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
நவம்பர் 14, 2022 - டிசம்பர் 23, 2022

 

முஸ்லிம் பாடசாலைகள் பாடசாலை நாட்கள்/விடுமுறை - 2021/2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்

மே 04, 2022 - மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022

1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 07, 2022

2ஆம் தவணை
ஜூலை 07, 2022 - செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022

விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - ஒக்டோபர் 26, 2022

3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஒக்டோபர் 27, 2022 - டிசம்பர் 23, 2022

PDF File: 

There is 1 Comment

Add new comment

Or log in with...