பாண் இறாத்தலின் விலை ரூ. 30 இனால் அதிகரிப்பு

450 கிராம் பாணின் விலை ரூ. 30 இனால் அதிகரிக்கப்படுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு (20) முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வெவ்வேறு நிறைகளைக் கொண்ட பாண்களின் புதிய விலைகள் 140 ரூபா முதல் 170 ரூபாவிற்கு இடையில் அமையுமென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகள் ரூ. 10 இனால் அதிகரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இன்று (19) முதல் கோதுமை மாவின் விலை ரூ. 40 இனால் அதிகரிக்கப்படுவதாக, பிறீமா நிறுவனம் அறிவித்திருந்தமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...