நிதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (04) நியமித்திருந்தார்.
அந்த வகையில் ஏற்கனவே நீதி அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்த அலி சப்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் (04) கடமைகளை அவர் பொறுப்பேற்றிருந்தார்.
அதன் பின்னர் இன்றையதினம் (05) பாராளுமன்ற அமர்வில் நிதியமைச்சராக ஒரு சில அறிவிப்புகளை முன்வைத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (04) வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதோடு, பாராளுமன்றத்தை பராமரிக்க சபை முதல்வர் மற்றும் பிரதம கொறடா ஆகியோரை நியமிக்க வேண்டியுள்ளதால், அமைச்சர்களாக தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நியமிக்கப்பட்டனர்.
Add new comment