ரூ. 200 ஆக இருந்த பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி ரூ. 1 ஆக குறைப்பு

ரூ. 200 ஆக இருந்த பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி ரூ. 1 ஆக குறைப்பு-Special Commodity Levy on Dates Reduced from Rs 200 - Rs 1

பேரீச்சம்பழம் இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த, கிலோகிராமிற்கு 200 ரூபா எனும் விசேட பண்ட வரி, ரூ. 1 ஆக, ரூ. 199 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பு கால சலுகையாக இன்று (28) முதல் குறித்த வரிக் குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக,  நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் 2273/01 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வறிவிப்பு வெளியிடப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் பேரீச்சம்பழம், இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் உண்மை இல்லையெனவும் அதன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவதாக, நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, பேரீச்சம்பழ இறக்குமதி நடவடிக்கையானது, இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொண்டுவரப்படவில்லை என, பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அப்பிள், ஆரஞ்சு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், பேரீச்சம்ப பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட இறக்குமதி வரி ரூ. 100 இலிருந்து ரூ. 200 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

PDF File: 

Add new comment

Or log in with...