அரச உத்தியோகத்தர்களின் விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்

அரச உத்தியோகத்தர்களின் விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்-Government Servants Special Fuel Allowance Removed

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இன்று (08) வெளியிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுக்கு மாதாந்தம் உரித்துடைய 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக விசேட அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவுகளே இவ்வாறு இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விசேட கடமை எரிபொருள் கொடுப்பனவுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களை முடிந்தவரை வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...