கொரோனா தொற்றுக்குள்ளான பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்

கொரோனா தொற்றுக்குள்ளான பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்-Queen Elizabeth II Tested Positive for COVID19

- இலேசான அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தலில்

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான இலேசான அறிகுறிகள் அவருக்கு இருப்பதாகவும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தொடர்ச்சியான மருத்துவர்களின்  கண்காணிப்பில் உள்ளதாகவும், பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II) எலிசபெத் அலெக்சாந்திரா மேரி எனும் இயற் பெயரைக் கொண்ட இவர், 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார்.

95 வயதான இரண்டாவது எலிசபெத் கடந்த பெப்ரவரி 06ம் திகதியுடன், ராணியாக பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் மூன்று டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட மகாராணி எலிசபெத் தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...