19 பவுண் நகை; ரூ. 65 ஆயிரம் பணம் திருட்டு

  - ஓய்வுபெற்ற  ஆசிரியர் வீட்டில் சம்பவம்

அதிகாலை வேளையில்  வீட்டுக்குள் நுழைந்து 19 பவுண் தங்க நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிருவை வீதி, அல்வாய் கிழக்கைச் சேர்ந்த   ஓய்வு பெற்ற ஆசிரியரான ப.பூரானந்தன் என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் அவரது மனைவியும் இன்று (27) அதிகாலை 4 மணியளவில் எழுந்து தமது கடமைகளை செய்து கொண்டு இருந்ததாகவும் பின்னர் ஆறு மணி அளவில் அலுமாரி திறந்து இருந்ததை பார்த்தே திருட்டு இடம்பெற்றது  தெரியவந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(நாகர்கோவில் விசேட நிருபர், கரவெட்டி தினகரன் நிருபர்)
 


Add new comment

Or log in with...