Sunday, October 24, 2021 - 2:42pm
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (23) சனிக்கிழமை மு.ப. 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்