Sunday, October 10, 2021 - 10:34pm
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
- 12.5kg: ரூ. 1,257 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 2,750
- 5kg: ரூ. 503 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 1,101
- 2.5 Kg: ரூ. 231 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 520
அண்மையில், பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பால் மா விலைகளை அதிகரிப்பதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் அறிவித்திருந்தது.
இதற்கு முன்னர் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய நிலையில் அதன் இறக்குமதி தொடர்பில் லாப் (Laugfs) சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.