- இலங்கைக்கு மேலும் 408,650 இலவச Pfizer தடுப்பூசி டோஸ்கள்
இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (30) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 172 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இதேவேளை இன்று (30) காலை 408,650 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
நாடுகளிடையே கொவிட்-19 தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் கொவெக்ஸ் (COVAX) வசதியின் கீழ் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி தொகையானது முதலில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிரந்து இன்று காலை 8.37 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதேவேளை COVAX வசதியின் கீழ் நாளைய தினம் (01) மேலும் 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக சன்ன ஜயசுமண குறிப்பிட்டார்.
நேற்று (29) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
இன்று (30) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...