அநுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்‌ஷ

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று (15) விஜயம் செய்திருந்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து நேற்றைய தினம் அங்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து உரையாடினார்.

தங்களை விசாரணை செய்து விரைவாக விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு அக்கைதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு, விரைவாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.