சான்றிதழ்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

சான்றிதழ்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு-Requesting Certificates Via Online & email Only-Department of Examination

- பெறுபேறு அத்தாட்சிப்படுத்தல் Online முறை மூலம் மாத்திரம்

பொதுப் பரீட்சைகளின் பெறுபேறு அத்தாட்சி சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பிப்பது இணைய வழி (Online), மின்னஞ்சல் மூலம் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மற்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில், பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சான்றிதழ்களுக்கான விண்ணப்பத்தை ஒன்லைன் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். சான்றிதழ்களின் தேவையின் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சிற்கு அல்லது விரைவு அஞ்சல் சேவை மூலம் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படும்.

இது தொடர்பிலான மேலதிக தகவலுக்கு www.doenets.lk மூலம் திணைக்களத்தின் இணையத்தை பார்வையிடவும்.

சான்றிதழ்களை, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலி (DoE) மூலமும் விண்ணப்பிக்கலாம்.

1. சான்றிதழை ஒன்லைனில் விண்ணப்பித்தல்
https://certificate.doenets.lk
2001 மற்றும் அதன் பின்னரான வருடங்களில் GCE (O/L) மற்றும் GCE (A/L) பரீட்சைகள்
விபரங்களுக்கு : 0112788137

2. மின்னஞ்சல் மூலம் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்
i. 2001 இற்கு முந்தைய வருடங்களில் GCE (O/L) மற்றும் GCE (A/L) பரீட்சைகளுக்கு
ii. தர்மாச்சார்ய, அடிப்படை பிரிவெனா, பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) போன்றவற்றிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விபரங்களுக்கு : (0112784323)

3. மின்னஞ்சல் மூலம் பரீட்சை இலக்கங்களை விண்ணப்பித்தல்
GCE (O/L) மற்றும் GCE (A/L) பரீட்சைகளுக்கு மட்டும்
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விபரங்களுக்கு: 0112784323

4. பெயர்களில் திருத்தங்களுக்கு,
GCE (O/L) மற்றும் GCE (A/L) ஆகிய பரீட்சைகளில் ஒன்று அல்லது 2 எழுத்துகளில் பெயர் திருத்தங்களுக்கு
மின்னஞ்சல் முகவரி: [email protected]

தேவையான ஆவணங்கள்: ஸ்கேன் செய்யப்பட்ட

  • விண்ணப்பதாரரின் கோரிக்கை கடிதம்
  • பிறப்புச் சான்றிதழ்
  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • பெயரை உறுதிப்படுத்தும் ஏனைய ஆவணங்கள்
  • பெயர் மாற்றம் தொடர்பான பெறுபேறு ஆவணங்கள்

விபரங்களுக்கு: 0112784537/ 0112784208

PDF File: 

Add new comment

Or log in with...