கொழும்பு டாம் வீதி பகுதியில் கட்டடமொன்றில் தீ

கொழும்பு டாம் வீதி பகுதியில் கட்டடமொன்றில் தீ-A Fire Broke Out in a Building In Dam Street-Colombo

கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் கட்டடமொன்றில் (Diamond Complex) தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன் மீட்புக் குழுவினரால் குறித்த கட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...