Monday, July 26, 2021 - 11:18am
இவ்வருடம் (2021) இடம்பெற வேண்டிய க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022 பெப்ரவரி இல் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, வழமையாக வருடாந்தம் டிசம்பர் மாதம் இடம்பெறும் இப்பரீட்சைகளை 2022 பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment