Thursday, July 22, 2021 - 6:00am
எம்மை விட்டுப் பிரிந்த டயகமவைச் சேர்ந்த ஹிஷாலினி மற்றும் இவ்வாறான பாதிப்புகளுக்குள்ளான அனைத்து சிறார்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு இன்றைய தினம் டயகம மேற்கு தோட்ட வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இந்த நிகழ்வு காவிட் -19 சுற்று நிரூபங்களுக்கு ஏற்ப இந்நிகழ்வு நடைபெறும் . இன்றைய தினம் இந்த நிகழ்வுகளில் நேரடியாக பங்குபற்ற முடியாதோர் உங்கள் வீட்டு வளாகங்களில் தீபம் அல்லது மெழுகுவர்த்தி சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்காெள்ளப்படுகின்றனர்.
Add new comment