ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது இளம் பெண் கொழும்பில் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயது பெண் ஒருவர் நேற்று கொழும்பு மோதர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் பொலிசாருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு வடக்கு ஊழல் மோசடி பிரிவு பொலிஸார் நேற்று அப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி 25 வயது பெண்மணி ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு கிலோ மற்றும் 24 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 


Add new comment

Or log in with...