இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் நுழைவது இடைநிறுத்தம்

இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் நுழைவது இடைநிறுத்தம்-All Passenger Arrivals into Sri Lanka Suspended-May 21 Midnight-May 31 Midnight

எதிர்வரும் மே 21 நள்ளிரவு முதல், மே 31 நள்ளிரவு வரை, அனைத்து பயணிகள் விமானங்களும் இலங்கைக்குள் நுழைவது இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.

ஆயினும் 10 நாட்கள் வரையான இக்காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளியேறும் விமானங்களுக்கு எவ்வித தடையம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சரக்குகள் விமான சேவைகளும் வழமை போன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் குறித்த காலப் பகுதியில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளால் நாட்டுக்குள் வரும் புதிய திரிபுகளை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...