திறந்த வர்த்தக நிலையங்களை உடன் மூடுமாறு பொலிஸார் உத்தரவு

பொகவந்தலாவை நகரம் முடக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நலன் கருதி இரண்டு மணித்தியாலங்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை திறக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் ஏனைய வர்த்தக நிலையங்களும் திறந்தமையினால் மீண்டும் உடனடியாக அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பொகவந்தலாவை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த வெளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 04 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிப்பட்டிருந்தது. இந்நிலையில் பொகவந்தலாவை பொது சுகாதார பகுதியில் கொரோனா தொற்றினால் ஒரே வீட்டில் இரண்டு மரணங்களும் 226 தொற்றாளர்ளும் அடையாளம் காணப்பட்டமையால் நேற்றுமுன்தினம் 17 அதிகாலை முதல் மறு அறிவித்தல்வரை பொகவந்தலாவை பொது சுகாதார காரியாலத்திற்குட்பட்ட ஹற்றன், பொகவந்தலாவை,நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10 கிராம அலுவலர் பிரிவுகள் சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டது ,

இந் நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பொகவந்தலாவை நகரில் விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொகவந்தலாவை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இரண்டு மணி நேரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும் ஏனைய வர்த்தக நிலையங்கள் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடுவதற்கு பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...