கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம்/ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்தனசிறியினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (27) முதல் குறித்த சுற்றறிக்கை அமுலுக்கு வருவதோடு, ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு மத்தியில் 'அரச சேவையை தடையின்றி நடாத்திச் செல்லல்' தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (02/2021) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வாரத்திற்கு 2 நாட்கள் எனும் வகையில் மாதத்திற்கு உச்சபட்சம் 8 நாட்கள் கடமைக்கு சமூகமளிக்காதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அதனை உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட விடுமுறைகளிலிருந்து கழிக்காதிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment