பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடுவதற்கு தடை

பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடுவதற்கு தடை-Sarath Weerasekera-Burqa Ban-Cabinet Approval

- சரத் வீரசேகரவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
- சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் அமுல்

பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையிலான அனைத்து முகம் மூடிகளுக்கும் தடை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்  குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக, அமைச்சரவை இணை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த தடையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (27) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சரத் வீரசேகரவின் குறித்த யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் தயாரானதும், அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் எனவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...