கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம்

கல்வி என்பது நாட்டின் தேவைக்கேற்ப மாறுபட வேண்டியது. ஒரு நாடு வளம் பெறுவதற்கு அரசியல் ஸ்தீரம்,பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணிகளாகும். இன்று எமது நாட்டில் உறுதியான ஓர் ஆட்சி நிலவுகிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனவே கல்வியில் பல மாற்றங்கள் கண்டிப்பாகச் செய்யயப்பட வேண்டும்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டின் பொருளாதாரம் தென்னை, இறப்பர், தேயிலை போன்றவற்றிலேயே தங்கியிருந்தது. அன்று மிகவும் செழிப்பான யுகமாகவும் காணப்பட்டது. இன்று நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத் துறை போன்றவற்றையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதை உணர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதற்கு முன்னரும் நாட்டின் கல்வி முறையில் பல தடவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக 1943, 1964, 1966, 1974, 1981 ஆகிய ஆண்டுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இருந்தும் அவை எதிர்காலத்தையும் நாட்டையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டனவா என்பது கேள்விக்குரியது.

நீர்வளம், நிலவளம் அனைத்தும் விவசாயத்துறைக்கு சாதகமாக இருந்த போதிலும் நாம் இன்னும் அத்துறையில் தன்னிறைவு பெறாதது கவலைக்குரியதாகும்.

இன்று கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நாட்டின் அனைத்துப் பிஜைகளின் உள்ளங்களிலும் நாட்டுப் பற்றை, குறிப்பாக இளைய தலைமுறையினர் உள்ளங்களில் ஏற்படுத்த வேண்டும். ஐந்தாம் தர புலமைப் பரீட்சை சுமையை சிறு மாணவர்களுக்கு இல்லாது ஒழிக்க வேண்டியது அவசியம். இப்பரீட்சையை ரத்துச் செய்வதற்கு தனியார் வகுப்பு நடத்துவோர் விரும்பப் போவதில்லை.

க.பொ.த சாதாரண தரத்தில் ஒன்பது பாடங்களை முடிந்த அளவில் குறைத்து மொழி, சமயம், விவசாயம், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்கலைகழகங்களுக்கு மருத்துவம், பொறியியல், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு கூடுதல் மாணவர்களை உள்வாங்கி அதன் மூலம் நாட்டில் திறமைசார் இளவயதினரை உருவாக்க முடியும்.

 ஏ. ஸீ. எம். ஜிப்ரி
- (காலி)

 


Add new comment

Or log in with...