கொவிட் வழிகாட்டி சுற்றுநிருபம் வெளியாகும்வரை சடலத்தை குளிரூட்டியில் வைக்க தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான  ஆலோசனை வழிகாட்டல் சுற்று நிருபம் வெளியாகும் வரை  குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க இரத்தினபுரி போதனா வைத்திய சாலை நிர்வாகம் நேற்றுமுன்தினம் (1) தீர்மானித்தது.

இறக்குவானை உக்வத்த வீதியில் உயிரிழந்த 45வயதுடைய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த  ஒருவரின் சடலத்தை  அவரது குடும்பத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு குளிரூட்டியில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றினால் உயிரிழக்கும்  சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி கிடைத்துள்ள போதிலும் இதற்கான வழிகாட்டல் சுற்று நிருபம் வெளிவராமையால்  வைத்தியசாலை நிர்வாகம் இந்த மனித நேயத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் உயிரிழந்ததையடுத்து இவரது சடலத்தை முஸ்லிம் சமய முறைகளுக்கு அமைய நல்லடக்கம் செய்ய அனுமதி தருமாறு இவரது குடும்பத்தினர் வேண்டியதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...