- பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடுகின்றனர்
வீட்டிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
கொவிட்-19 வைரஸ் தொடர்பான PCR பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, தெரிவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த, மாகொல வடக்கு, தேவாலய வீதியில் வசிக்கும் நிமேஷ் மதுஷங்க எனும் 22 வயது நபரே நேற்று (26) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் என்பவர் சந்தேகநபர்.
அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி - சபுகஸ்கந்த:
071 8591599/011 2400315
அவசர அழைப்பு இலக்கம்:
011 2433333/119
குறித்த இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குற்றமொன்றிற்காக சிறை வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.
Add new comment