37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராய ஆலோசனை

கொரோனா தடுப்புக்கு உள்நாட்டில் தயாரித்த

கொரோனா ஒழிப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, உள்நாட்டு வைத்திய தேசிய சபை மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த மருந்து வகைகளின் நோய் எதிர்ப்பு தரத்தின் சாதக தன்மை குறித்து ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, குறித்த மருந்து வகைகளின் தரம் தொடர்பில்  ஆராய்வதற்காக உணவு ஓளடத ஆயுர்வேத திணைக்களம் மற்றும் உள்நாட்டு வைத்திய தேசிய சபை ஆகியன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இந்த மருந்து வகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 


Add new comment

Or log in with...