தொடர்மாடிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

தொடர்மாடிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு-Housing Schemes Released From Isolation Status

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொடர்மாடிக் குடியிருப்புகள் இன்று (12) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொடர்மாடிகள்
மட்டக்குளி - ரன்திய உயன
மோதறை - மிஹிஜய செவன, மெத்சந்த செவன
கிரேண்ட்பாஸ் - சமகிபுர, மோதர உயன
தெமட்டகொடை - மிஹிந்து செத்புர உயன

அந்த வகையில், தொடர்மாடிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்படுவதாகவும், குறித்த தொடர்மாடிகளில் மேற்கொண்ட PCR பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...