குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு-Curfew in Kuliyapitiya-Pannala-Giriulla-Narammala-Dummalasuriya

உடன் அமுலாகும் வகையில் குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய குளியாபிட்டி, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

குளியாபிட்டி பிரதேசத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குளியாபிட்டியிலுள்ள கய்யால, ஊறுபிட்டிய ஆகிய கிராமங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...