அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கும் மற்றும் அவ்வருடத்தின் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மோதறை மீன்பிடி துறைமுகத்தை, தனியார் நிறுவனமொன்றுக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுவதற்காக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபையை ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக 05 குற்றச்சாட்டுகளின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனையோராக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நில் ரவீந்திர முனசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...