28 அமைச்சு; 40 இராஜாங்க அமைச்சு; புதன்கிழமை பதவிப் பிரமாணம்

28 அமைச்சு; 40 இராஜாங்க அமைச்சு; புதன் பதவிப் பிரமாணம்-28 Ministers and 40 State Ministers Sworn on Aug 12-Extraordinary Gazette Released

- அமைச்சுகளின் விடயங்கள், பொறுப்புகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம், நாளை மறுதினம் (12), வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உரிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...