இம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களில், 16 முஸ்லிம்கள், 26 தமிழர்கள் உள்ளிட்ட 42 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தேசியப்பட்டியலில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மொஹமட் முஸம்மில் (விமல் வீரவன்சவின் கட்சி தே.சு.மு.), மர்ஜான் பளீல் ஆகிய 3 முஸ்லிம்கள் மற்றும் சுரேன் ராகவன் ஆகிய 04 தமிழ் பேசும் பிரதிநிதிகளுக்கு வாயப்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமையவுள்ள பாராளுமன்றத்தில் 20 முஸ்லிம்கள், 23 தமிழர்கள் உள்ளிட்ட மொத்தமாக 43 தமிழ் பேசும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டம்
அங்கஜன் ராமநாதன் - 36,365 (SLFP)
சிவஞானம் ஶ்ரீதரன் - 35,884 (ITAK/TNA)
எம்.ஏ. சுமந்திரன் - 27,834 (ITAK/TNA)
தர்மலிங்கம் சித்தார்த்தன் - 23,840 (ITAK/TNA)
டக்ளஸ் தேவானந்தா - 32,146 (EPDP)
கஜேந்திர குமார் பொன்னம்பலம் - 31,658 (AITC)
சி.வி. விக்னேஸ்வரன் - 21,554 (TMTK)
வன்னி மாவட்டம்
சார்ள்ஸ் நிர்மலநாதன் - 25,668 (ITAK/TNA)
செல்வம் அடைக்கலநாதன் - 18,563 (ITAK/TNA)
எஸ். யோகராஜலிங்கம் - 15,180 (ITAK/TNA)
குலசிங்கம் திலீபன் - 3,203 (EPDP)
ரிஷாட் பதியுதீன் - 28,203 (SJB)
காதர் மஸ்தான் - 13,454 (SLPP)
திகாமடுல்ல மாவட்டம்
எச்.எம்.எம். ஹரீஸ் - 36,850 (SJB)
பைஸல் காசிம் -29,423 (SJB)
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் - 35,697 (NC)
மொஹமட் முஸரப் -18,389 (ACMC)
மட்டக்களப்பு மாவட்டம்
சிவனேசத்துரை சந்திரகாந்தன் - 54,198 (TMVP)
சாணக்யா ராஹுல் - 33,332 (ITAK/TNA)
கோவிந்தன் கருணாகரன் - 26, 382 (ITAK/TNA)
எஸ். வியாழேந்திரன் - 22,218 (SLPP)
ஹாபிஸ் நசீர் - 17,599 (SLMC)
நுவரெலியா மாவட்டம்
ஜீவன் தொண்டமான் - 109,155 (SLPP)
மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902 (SLPP)
பி. திகாம்பரம் - 83,392 (SJB)
வீ. இராதாகிருஸ்ணன் - 72,167 (SJB)
எம். உதயகுமார் - 68,119 (SJB)
திருகோணமலை மாவட்டம்
எம்.எஸ். தௌபீக் - 43,759 (SJB)
இம்ரான் மஹ்ரூப் - 39,029 (SJB)
ஆர். சம்பந்தன் - 21, 422 (ITAK/TNA)
கண்டி மாவட்டம்
ரஊப் ஹக்கீம் - 83,398 (SJB)
அப்துல் ஹலீம் - 71,063 (SJB)
எம். வேலுகுமார் - 57,445 (SJB)
கொழும்பு மாவட்டம்
எஸ்.எம். மரிக்கார் - 96,916 (SJB)
முஜிபுர் ரஹ்மான் - 87,589 (SJB)
மனோ கணேஷன் - 62,091 (SJB)
பதுளை மாவட்டம்
வடிவேல் சுரேஸ் - 49,762 (SJB)
அரவிந்தகுமார் - 45,491 (SJB)
கேகாலை மாவட்டம்
கபீர் ஹஷீம் - 58,716 (SJB)
புத்தளம் மாவட்டம்
அப்துல் அலி சப்ரி - 33,509 (MNA)
அநுராதபுரம் மாவட்டம்
இஷாக் ரஹ்மான் - 49,290 (SJB)
Add new comment