முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவை, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்தி, இளைஞர் ஒருவரை காயப்படுத்தி விட்டு, தப்பிச் சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கணேபொலவினால் குறித்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட WP KP 4575 எனும் ஜீப் வண்டியை பாதுகாப்பாற்ற முறையில் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை, அவ்விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல் தப்பிச் சென்றமை, படுகாயம் ஏற்படுத்தியமை சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு எதிராக குறித்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Add new comment