சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

2016ம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.  

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பொலிஸ் அதிகாரி சுதத் அஸ்மடல மற்றும் திலும் துசித்த ஆகியோருக்கே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.  

2016ம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஜீப் வண்டி மோட்டார் சைக்கிளில் சென்ற சன்தீப் சம்பத் என்ற இளைஞர் மீது மோதியதில் அந்த இளைஞர் படுகாயங்களுக்குள்ளானார்.  

இந்த சம்பவம் தொடர்பில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் எனினும் வேறொருவர் வாகனத்தை செலுத்தியதாக தெரிவித்து பொரளை பொலிஸில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அச்சந்தர்ப்பத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்க தான் வாகனத்தை செலுத்தினார் என தெரிவித்த நபரின் வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  


Add new comment

Or log in with...