Wednesday, June 24, 2020 - 12:47pm
கடந்த 2016, இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக, சட்ட மாஅதிபர் கொழும்பு மேலதிக நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொய்ச் சாட்சியங்களை உருவாக்கியதாகவும், சாட்சியங்களை மறைத்ததாகவும் தெரிவித்து, சம்பிக்க ரணவக மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக, சட்ட மாஅதிபர் கொழும்பு மேலதிக நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
Add new comment