கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 712ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 33 கடற்படையினர் பூரண குணமடைந்து நேற்று (14) வெளியேறியுள்ளனர்.
இக்கடற்படையினரில் 03 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலும், 12 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 07 பேர் IDH வைத்தியசாலையிலும், 02 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 08 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று மேலும் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment