Monday, June 1, 2020 - 5:12pm
வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்யுமாறு, சட்ட மாஅதிபரினால் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு (CCD) ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக சம்பந்தப்பட்ட ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் போலியான ஆதாரங்களை இட்டுக்கட்டியதாக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, அவரை கைது செய்வதற்கான பிடியாணையை பெற்று, கைது செய்யுமாறு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Add new comment