சிறைச்சாலையில் வாக்குமூலம் பெற CCD இற்கு அனுமதி
கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகேயின் வாகன சாரதி திலும் துசித குமார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 06ஆம் திகதி வரை குறித்த சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது சட்டத்தரணி சகிதம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை தொடர்ந்து, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வாவினால் இன்று (24) இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி சந்தேகநபரிடமிருந்து சிறைச்சாலையில் வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பு குற்றப் பிரிவுக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
Add new comment