9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு

9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released

சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகளின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஹோட்டல்களான ஷ்ங்ரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் தெஹிவளையிலுள்ள ட்ரொபிகல் இன் விடுதி உள்ளிட்ட நான்கு ஹோட்டல்கள் மற்றும் தெமட்டகொடையிலுள்ள வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், 9 தற்கொலை தாக்குதல்தாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளின் விபரங்கள்:

ஷ்ங்ரி லா ஹோட்டல், கொழும்பு (முதலாவது தாக்குதல் தாரி)
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released1. மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ஸஹ்ரான்

குடைக்காரர் வீதி, முஹிதீன் பள்ளி வீதி, காத்தான்குடி 03
சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் இவரது மனைவியும், பெண் குழந்தையொன்றும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவரது தந்தை மற்றும் ரில்வான், செய்னி ஆகிய இரு சகோதர்கள் உள்ளிட்ட மூவரும் சாய்ந்தமருது சம்பவத்தில் வெடிக்கச் செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சாரதியான கபூர் என அழைக்கப்படும் ஆதம்லெப்பை CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஸஹ்ரானின் சகோதரரான செய்னியின் மனைவியின் தந்தை ஆவார்.

ஷ்ங்ரி லா ஹோட்டல், கொழும்பு (இரண்டாவது தாக்குதல் தாரி)
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released2. மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
இவரது தந்தையான் மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் மற்றும் தாக்குதல்தாரியின் இரு சகோதரிகள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சின்னமன் கிராண்ட், கொழும்பு
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released3. மொஹம்மட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
வெல்லம்பிட்டி பிரதேசத்திலுள்ள செப்பு தொழிற்சாலை உரிமையாளர்.
ஷங்ரி லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் சகோதரர்.
இவரது மனைவி CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released4. மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்
புதிய யோன் வீதி, கொழும்பு 12 மற்றும் பண்டாரநாயக்க வீதி, கொழும்பு 12
(இரு முகவரிகள்)
இவரது மனைவி CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் ஆலயம்
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released5. அச்சி முஹம்மது மொஹம்மட் ஹஸ்துன்
AFC வீதி, வாழைச்சேனை
இவரது மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் ஆலயம்

9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released6. அலாவுதீன் அஹமட் முவாத்
சென்றல் வீதி, மட்டக்குளி
இவரது சகோதரர் CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு

9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released7. மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத்
மையவாடி வீதி, புதிய காத்தான்குடி

 

 

 

ட்ரொபிகல் இன், தெஹிவளை
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released8. அப்துல் லத்தீப் ஜமீல் மொஹம்மட்
வெலம்பட, கம்பளை
லன்சியாவத்தை, வெல்லம்பிட்டி
(இரு முகவரிகள்)
இவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் TID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மஹவில கார்டன், தெமட்டகொடை (வெடிக்க வைப்பு)
9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு-Sri Lanka Suicide Attackers Name List-Police Released9. பாத்திமா இல்ஹாம்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
ஷ்ங்ரி லா ஹோட்டல் தாக்குதல்தாரியான இல்ஹாம் அஹமட்டின் மனைவி

இவர்கள் அனைவரும், பல்வேறு நபர்களின் வாக்குமூலம் மற்றும் விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நபர்களை மேலும் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், DNA பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக, ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குறித்த தீவிரவாதிளின் சொத்து விபரங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட குறித்த சொத்துகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் ஒப்பந்த சட்டம் மற்றும் நிதி மோசடி தடுப்பு சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு அமைய, குறித்த சொத்துகளை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பொலிசார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையினர் உடன் இணைந்து தனித்தனியாகவும் இணைந்து பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 

Add new comment

Or log in with...