- குருதி, வெல்ல, கொலஸ்ட்ரோல், கண், பல் பரிசோதனைகள்
- நேற்றும் இன்றும் மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை நிகழ்வு
கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவு உள்ளிட்டன இணைந்து நடாத்தும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஒத்துழைப்புடன் இலவச மருத்துவ முகாம் ஒன்றை ஜனவரி 28ஆம், 29ஆம் திகதிகளான இன்றும் நடத்தவிருப்பதாக கொழும்பு தாமரைக் கோபுரம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு கொழும்பு தாமரைக் கோபுரத்தின் இரண்டாவது மாடி கட்டி டத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் பற்கள் தொடர்பான பரிசோதனை, ENT பரிசோதனை, கொலஸ்டரோல் பரிசோதனை, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை (12மணி நேரம் மற்றும்10 மணிநேரம் உணவின்றி இருத்தல் அவசியம்), கண் பரிசோதனை, ECG, BMI குருதி அழுத்தப் பரிசோதனை போன்றனவும் இடம் பெறவுள்ளதுடன் இந் நோய்களுக்கான இலவச ஆலோசனையும் இதன் போது வழங்கப்படடும்.
மேலும் இவ்விரு தினங்களிலும் மருத்துவ முகாமிற்கு வருகை தரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மேலதிக சலுகையாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் அவதானிப்புத் தளத்திற்கு இலவசமாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்விற்கான இணை அனுசரணையாளராக "Iodex" நிறுவனம் காணப்படுவதுடன் இந் நிறுவனத்தினால் இலவச தலை மற்றும் கால் போனற் வற்றிக்கான மசாஜ் சேவையையும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பாலுணவுப் பங்காளியான. "Pure Dale" நிறுவனம் குடிபானங்களையும் வழங்கவிருக்கின்றன.
கொழும்பு தாமரைக் கோபுரமும் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவும் சமூகத்திற்குத் தரமான மருத்துவ சேவையை வழங்கவுள்ளது. சமூகத்தின் சகல உறுப்பினர்களும் தமது ஆரோக்கியம் மற்றும் தமது உடல் நலனை பேணுவதற்கு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்றுமாறுகேட்டுக்கொள்கின்றனர்.
Add new comment