Tuesday, February 23, 2016 - 5:45pm
சந்யா எக்னலிகொடவை பயமுறுத்தியமை தொடர்பான வழக்கில், பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (23) ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.
அத்துடன் சாட்சியாளர்களை பயமுறுத்தவோ, அங்குமிங்கும் அறிக்கைகளை விட்டுக்கொண்டு திரியவோ கூடாது என நீதவான் இதன்போது அவருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் கட்டுக்கடங்காத வகையில் செயற்பட்டமை தொடர்பான வழக்கிலும் அவருக்கு இன்று (23) பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment