தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

அம்பாறை, சம்மாந்துறை வயல்வெளியில சுற்றுலா விசாவில் வந்து வேளாண்மை வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரை நேற்று (10) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

24, 25 வயதுகளையுடைய இவர்கள் இருவரும் வயல்வெளியில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் ஈடுபடுவதாக  தகவல் கிடைத்ததை அடுத்து, குறித்த வயல்வெளிக்குச் சென்று இவர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர் - என்.ஹரன்)

 


Add new comment

Or log in with...