காரில் மோதி ஐவரை கொன்ற ஆடவர் கைது

சீனாவின் குவான்சுவில் பாதசாரிகள் மீது கார் வண்டியை செலுத்தி ஐவரை கொன்று மேலும் 17 பேருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அந்த ஆடவர் வேண்டுமென்றே இதனைச் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விபத்துக்குப் பின்னர் அந்த ஆடவர் கார் வண்டியில் இருந்து இறங்கி பணத் தாள்களை வீசி எறியும் காட்சி அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் பரவியுள்ளன. 22 வயது ஆடவரை கைது செய்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

19 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தத் தெற்கு நகரில் கடந்த புதன்கிழமை (11) பரபரப்பான மாலை நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


There is 1 Comment

Add new comment

Or log in with...