2024இல் இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் 2024 ஆம் ஆண்டின் சர்வதேச போட்டி அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி 2024 ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் ட்ரபர்டில் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 2 ஆவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 29 ஆம் திகதி லோட்ஸிலும் 3ஆவது டெஸ்ட் போட்டி கியா ஓவலில் செப்டெம்பர் 3 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி 2024 ஜூலையில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.


Add new comment

Or log in with...