Tuesday, July 4, 2023 - 11:44am
கண்டி கட்டுகஸ்தொட்டை திரு இருதயநாதர் ஆலயத்தில் வருடாந்த திருவிழா கடந்த 25 ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிளிட்டஸ் சந்ரசிறி பெரேரா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியில் கண்டி மறை மாவட்டத்தின் குரு முதல்வரும் ஆலயத்தின் பங்குத் தந்தையுமான அருட்திரு எல்வின் பீற்றர் பெனாண்டோ அடிகளார் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி நளின்ட் அடிகளாரோடு ஏனைய அருட்தந்தையர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்பலி மற்றும் திருச்சுரூப பவனியையும் படங்களில் காணலாம்.
(படங்கள் உதவி: மத்தியூ ஜேசுதாஸன்)
Add new comment