ஜூலை 01 முதல் அமுலாகும் மின்சார கட்டண குறைப்பு

- மொத்தமாக 14.2% கட்டணக் குறைப்பு
- 0-30 இற்கு 64.6% குறைப்பு
- 31-60 இற்கு 51.5% குறைப்பு
- 61-90 இற்கு 24.5% குறைப்பு
- 91-120 இற்கு 13.9% குறைப்பு
- 120 இற்கு மேற்பட்ட பாவனைக்கு கட்டணக் குறைப்பு கிடையாது

இன்று ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆயினும் இங்கு
0 - 30 அலகு பாவனையாளர்களுக்கான கட்டணம் 64.6% இனாலும்
31-60 அலகு பாவனையாளர்களுக்கான கட்டணம் 51.5% இனாலும்
61-90 அலகு பாவனையாளர்களுக்கான கட்டணம் 24.5% இனாலும்
91-120 அலகு பாவனையாளர்களுக்கு நிலையான கட்டணம் மாத்திரம் குறைப்பு
121 இற்கு மேற்பட்ட பாவனையாளர்களுக்கு கட்டணக் குறைப்பு கிடையாது

அதற்கமைய,
வீட்டு மின் பாவனையில்

 • 0 - 30 அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

• 64.6% கட்டணக் குறைப்பு
• ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 30 இலிருந்து ரூ. 10 ஆக குறைப்பு
• மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 400 இலிருந்து ரூ. 150 ஆக குறைப்பு

 • 31 - 60 அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

• 51.5% கட்டணக் குறைப்பு
• ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 37 இலிருந்து ரூ. 25 ஆக குறைப்பு
• மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 550 இலிருந்து ரூ. 300 ஆக குறைப்பு

 • 0 - 60 அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

• 51.5% கட்டணக் குறைப்பு
• ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 42 இலிருந்து ரூ. 32 ஆக குறைப்பு
• மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 550 இலிருந்து ரூ. 300 ஆக குறைப்பு

 • 61 - 90 அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

• 24.5% கட்டணக் குறைப்பு
• ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 42 இலிருந்து ரூ. 35 ஆக குறைப்பு
• மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 650 இலிருந்து ரூ. 400 ஆகை குறைப்பு

 • 91 - 120 அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

- 13.9% கட்டணக் குறைப்பு
- ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 42 இலிருந்து ரூ. 35 ஆக குறைப்பு
- மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 650 இலிருந்து ரூ. 400 ஆகை குறைப்பு

 • 121 இற்கு மேற்பட்ட அலகு நுகர்வு கொண்ட பிரிவுக்கு

• கட்டணங்களில் மாற்றமில்லை

 • மத வழிபாட்டுத் தலங்களுக்கு

• 16% கட்டணக் குறைப்பு
• குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு ரூ. 10 (ரூ. 30 இலிருந்து ரூ. 10 ஆக குறைப்பு)
• மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய மின்கலத் தொகுதிகளை உடனடியாக நிறுவ மின்சார சபை மற்றும் லங்கா தனியார்  மின்சார நிறுவனத்திற்கு உத்தரவு
• ஹோட்டல் துறைக்கு 26.3% கட்டணக் குறைப்பு
• கைத்தொழில் துறையினருக்கு 9% கட்டணக் குறைப்பு
• வணிக கட்டடங்களுக்கு 5% கட்டணக் குறைப்பு
• அரச கட்டடங்களுக்கு 1% கட்டணக் குறைப்பு

இணைப்பு 2

2023 ஜூலை 01 இலிருந்தான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான நிபந்தனைகள்

 1. இலங்கை மின்சார சபையும் (CEB) மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் (LECO) கூட்டு ஆதன அதிகார சபையின் (குடியிருப்பு வளாகங்கள்) நுகர்வோருக்கு பொருந்தக்கூடிய கட்டண பிரிவின் கீழ் கட்டணங்களை உடனடியாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீட்டுத் தொகுதிகளின் பொதுவான பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் ஏனைய பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்வதற்காக, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ், CEB/LECO, அந்தந்த வீட்டுத் தொகுதிகளின் நிர்வாகக் கூட்டுத்தாபனங்களுடன் சேவை கட்டணம் அமைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
 2. வீதி விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிட்டு/மதிப்பீடு செய்து மின்சார பட்டியல்களை வழங்க வேண்டும் மற்றும் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள்/ வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 3. மின்சார பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகையை முதலீடு செய்யவும், வருமானத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வட்டி செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 4. மின்சார பாவனையாளர் உத்தரவாத வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியை அந்தந்த வாடிக்கையாளரின் மாதாந்திர மின் பட்டியலில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 5. எரிபொருள் மற்றும் நிலக்கரி விநியோகம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை நிலக்கரி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 6. இலங்கை மின்சார சபை மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மின்சாரசபையின் மின்பரிமாற்ற பிரிவுக்கும் இடையிலான மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மின்சாரசபையின் மின்பரிமாற்ற மற்றும் மின் விநியோகப் பிரிவுக்கு இடையில் மின்சார விற்பனைக்கான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
 7. தற்போது உரிமம் இல்லாமல் இயங்கி வரும் மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 2 மாதங்களுக்குள் உரிமம் பெற வேண்டும்.
 8. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து (கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட) மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.
 9. இந்த முடிவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், மின்சார சபை மொத்த வழங்கல் பரிமாற்றக் கணக்கை செயல்படுத்த வேண்டும்.
 10. நிகர அளவீடு மற்றும் நிகர கணக்கியல் முறைகளின் கீழ், கூரைமேல் சூரிய சக்தி அமைப்புகளைக் கொண்ட மின்சார நுகர்வோர் அவர்கள் இறக்குமதி செய்யும் மின்சாரத்தின் நிகர அளவின் அடிப்படையில் மாதாந்த நிலையான கட்டணங்கள் வசூலிக்கப்படும். அவர்கள் நிகர ஏற்றுமதி செய்திருந்தால், மாதாந்த கட்டணம் பூச்சிய மாதாந்த மின்சார நுகர்வு அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 11. இலங்கை மின்சார சபையும் (CEB) மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (LECO) ஆகியவை மத வழிபாட்டுத் தலங்களுக்கு கூரைமேல் சூரிய சக்தி தொகுதிகளை நிறுவும் செயன்முறையை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்ற அறிக்கையை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: மேற்கூறிய நிபந்தனைகளில் 1, 2, 4, 5, 6, 8, 9 ஆகிய விதிகள் கடந்த முறை கட்டண திருத்தத்திலும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

PDF icon Tariff Comparison July 2023.pdf (341.83 KB)
PDF icon LettertoCEBtariff.pdf (1.04 MB)

PDF File: 

Add new comment

Or log in with...