புத்தளம், மதுரங்குளி செம்பட்டை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அதிசொகுசு பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (30) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீயை மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாலி விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்
Add new comment