கட்டார் விமான சேவையில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு

 - விண்ணப்ப முடிவு ஜூலை 26

கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டார் விமான சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆகக் குறைந்த வயது எல்லை 21ஆகவும், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவராகவும், அம்மொழியில் சிறப்பாக உரையாடக் கூடியவராகவும் விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.

உயர் கல்வியைக் கற்றவர்கள், ஆரோக்கியமானவர்கள், சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள், பன்னாட்டுக் குழுக்களுடன் பணியாற்றக் கூடியவர்கள் இந்த பதவிக்கு தகுதியுடையவர்களாக கணிக்கப்படுவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

- லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...