கிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நேற்று (28)  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட் சந்தேகநபர்களுடன் துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட  துப்பாக்கியும்  மோட்டார் சைக்கிளும் கணேசபுரம் பகுதியில்  வைத்து குற்ற புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...