செந்தில் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

- நிலுவையில் உள்ள மட்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று(27) இடம்பெற்றது.

இக்கூட்டமானது கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான  வியாழேந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரன் மற்றும் அரசாங்க அதிபர்கள் , அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த  அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்டத்தின் தற்போதைய சுய நிலைத்தன்மையை மேம்படுத்த புதிய வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...